உள்ளூர் செய்திகள்
.

வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபசாரம்-3 புரோக்கர்கள் கைது

Published On 2022-02-11 15:43 IST   |   Update On 2022-02-11 15:43:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபசாரம் நடத்திய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு மிக அருகில் கர்நாடக எல்லைப் பகுதியில் ஆனேக்கல் என்ற ஊர் உள்ளது. 

இந்த பகுதியில், வெளிமாநிலத்திலிருந்து ஏழை பெண்களை வேலை க்கு சேர்த்து விடுவதாக அழைத்து வந்து, அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பப்பு சுக்லா (24), ரஹீம்(22) மற்றும் நயிமுத்தீன் லஷ்கர் (26) ஆகிய அந்த 3 பேரும், ஆனேக்கல்-சந்தாபுரா முக்கிய சாலையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.  பின்னர் அந்த கும்பல் அசாம் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏழை பெண்களை, வேலை வாய்ப்பு கொடுப்பதாக அழைத்து வந்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். 

ஆனேக்கல், சந்தாபுரா, ஹெப்பகோடி ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து போலீச £ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று சந்தாபுரா சாலையில் உள்ள அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீட்டுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லேஷ் தலைமையில் ஆனேக்கல் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு புகுந்து பப்பு சுக்லா, ரஹீம், நயிமுத்தீன் லஷ்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், வீட்டில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 3 இளம் பெண்களையும் போலீசார் மீட்டு, மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News