உள்ளூர் செய்திகள்
.

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-02-10 15:28 IST   |   Update On 2022-02-10 15:28:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியானார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர்  ராமச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (வயது 18). 

இந்த நிலையில் நேற்று நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதி (18), பாலகிருஷ்ணன் (23), நாரோஜ் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது நந்தகுமார் ஓட்டிய மோட்டார் சைக்கிள், பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தலையில் பலத்த அடிபட்டு காயம் அடைந்த நந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News