உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத் தில் வார்டு ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 81 வார்டுகளில் 4-ல் மட்டும் தனித்துப்போட்டியிடுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தாங்கள் கேட்ட வார்டுகளை ஒதுக்காததால், அக்கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் 6 வார்டுகளிலும், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 5 வார்டுகளிலும், குரும்பலூர் பேரூராட்சியில் 3 வார்டுகளிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் 4 வார்டுகளிலும், பூலாம்பாடி பேரூராட்சியில் 1 வார்டிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
ஆனால் பெரம்பலூர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 15 வார்டுகளை கொண்ட அரும்பாவூர் பேரூராட்சியில் 1 மற்றும் 11 ஆகிய 2 வார்டுகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பூலாம்பட்டி பேரூராட்சி யில் 1-வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நல்லதம்பி என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதனால் 21 நகராட்சி வார்டுகள், 60 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 81 வார்டுகளை கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரூராட்சி வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது குறித்து அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறும்போது,
கடைசி நேரத்தில் தனித்து போட்டியிடுவதாக கட்சி எடுத்த முடிவால் குறுகிய காலத்தில் வேட்பாளர்களை தயார் செய்ய முடியவில்லை. இதனால் குறைவான வார்டுகளில் போட்டியிடும் நிலை உருவாகிவிட்டது. ஆனாலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் லப்பைக்குடிகாட்டில் 3 பேர், குரும்பலூரில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மற்ற வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் தேர்தல் பணி செய்யவல்லை என்றார்.