உள்ளூர் செய்திகள்
போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்த போது எடுத்த படம்.

காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

Published On 2022-02-09 13:42 IST   |   Update On 2022-02-09 13:42:00 IST
பெரம்பலூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது.
பெரம்பலூர்:

தேர்தல்  நேரங்களில்  மக்களிடையே  பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும்   வகையில் வாக்காளர்களாகிய உங்களுடன் நாங்கள் எப்போதும் போல் இருக்கிறோம் என்ற உணர்வை  ஏற்படுத்திடவும், அச்சமின்றி ஓட்டளிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்திடவும்  போலீசார் பெரம்பலூர் மற்றும் குரும்பலூரில் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தினர்.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய கொடி அணிவகுப்பை எஸ்.பி. மணி தொடங்கி வைத்தார். இந்த கொடி அணிவகுப்பு பாலக்கரை, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காம ராஜர் வளைவு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.

இதே போல் குரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகம் வரையிலும்  போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் துப்பாக்கி ஏந்தியும், லத்தி, தடுப்பு போன்ற உபகரணங்களை ஏந்திய வகையில் போலீசார் கலந்து கொண்டனர். மேலும் போலீசார் கலவரங்களை தடுக்கும் பயன்படுத்தும் வஜ்ரா மற்றும் போலீசார் வாகனங்கள் இடம் பெற்றது.

இந்த  அணிவகுப்பில்  ஏ.டி.எஸ்.பி.க்கள்  ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், டி.எஸ்.பி.க்கள் வளவன், தங்கவேல், சஞ்சீவ்குமார், சந்தியா, சுப்பாராமன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 180 பேர் கலந்து கொண் டனர்.

Similar News