உள்ளூர் செய்திகள்
மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சங்கராபுரம் அருகே வண்டல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2022-02-08 16:10 IST   |   Update On 2022-02-08 16:10:00 IST
சங்கராபுரம் அருகே வண்டல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே காட்டு வனஞ்சூரில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. சரவணன் ரோந்து சென்றார். அப்போது மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் வண்டல் மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்துக்கு ஆர்.டி.ஓ. வருவதை கண்ட மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சங்கராபுரம் வி.ஏ.ஓ. வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து வண்டல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

Similar News