உள்ளூர் செய்திகள்
கச்சத்தீவு திருவிழா

கச்சத்தீவு திருவிழா- மு.க.ஸ்டாலின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றது

Published On 2022-02-08 10:22 GMT   |   Update On 2022-02-08 10:22 GMT
கச்சத்தீவு திருவிழாவில் இந்திய தமிழர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளார்.
சென்னை:

தமிழகம்-இலங்கை இடையே இருக்கும் கச்சத்தீவில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடக்கும் விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.

கச்சத்தீவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வழிபாடுகள் செய்ய இந்திய தமிழர்களுக்கு உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதோடு தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு மூலமாகவும் இலங்கை அமைச்சருடன் பேச வைத்தார்.

அதற்கு பலன் கிடைத்துள்ளது. மு.க.ஸ்டாலின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவு திருவிழாவில் இந்திய தமிழர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது” என்று கூறினார்.

Tags:    

Similar News