உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

Published On 2022-02-08 12:42 IST   |   Update On 2022-02-08 12:42:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருச்சி தலைமை மின் பொறியாளர் அலுவலகத்துடன் இணைந்திருந்த பெரம்பலூர் கோட்ட மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தை விழுப்புரம் மண்டலத்துடன் இணைக்கக் கூடாது. 

திருவாரூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றதைப் போல், பெரம்பலூர் உள்பட இதர மாவட்டங்களிலும் நடத்த தமிழக முதல்வரும், காவல் துறை இயக்குநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வட கிழக்கு பருவமழையால் மகசூல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய வங்கியில், அனைத்துப் பயிர் கடன் செலுத்தும் காலக்கெடுவை ஓராண்டாக நிர்ணயம் செய்து தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் கைகளை தட்டி முழக்கமிட்டனர்.

Similar News