உள்ளூர் செய்திகள்
மாயம்

கள்ளக்குறிச்சியில் வேலைக்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்

Published On 2022-02-07 16:00 IST   |   Update On 2022-02-07 16:00:00 IST
கள்ளக்குறிச்சியில் வேலைக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அவரது மகள் ரேணுகா (வயது 20), இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள கவரிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரேணுகா மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் தனது மகளை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஜெகநாதன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில் சின்னசேலம் அருகே பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறார்கள்.

Similar News