உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கோவில் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் பொருட்கள் கொள்ளை

Published On 2022-02-07 12:05 IST   |   Update On 2022-02-07 12:05:00 IST
கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சுமார் 1.70 லட்சம் மதிபுள்ள பொருட்களை அள்ளி சென்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மங்குன்காடு பகுதியில் ஸ்ரீகுலக்கரை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பூசாமி அம்மாசி என்பவர் பூஜை செய்து விட்டு பூட்டி விட்டு சென்று விட்டார்.

வழக்கம்போல் காலையில் அம்மாசி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியானார்.

உள்ளே சென்று பார்த்த போது கோவில் இருந்த வெள்ளி வேல், பித்தளை குடம், மணி, சொம்பு, சரவிளக்கு, குத்துவிளக்கு, பொங்கல் வைக்கும் பாத்திரம், ரேடியோ செட் உட்பட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான பொருட்களும், கோவில்  உண்டியல் பணம் ரூ.10ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News