உள்ளூர் செய்திகள்
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன்

கிழக்கிந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு வடக்கிந்திய கம்பெனி ஆளவா குடியரசு பெற்றோம்? - கமல்ஹாசன்

Published On 2022-02-06 14:45 GMT   |   Update On 2022-02-06 14:45 GMT
தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் 1,338 பேர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கினார்.

தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  ஈடுபட்டார்.

சென்னையில் மட்டும் 182 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்னையின் 123-வது வார்டில் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மாலாவை ஆதரித்து கமலஹாசன் வீடு வீடாக பரப்புரையில் ஈடுபட்டார். விசாலாட்சி தோட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: 

மத்திய அரசின் பேச்சை கேட்டு ஆளுநர் செயல்படுகிறர். ஆளுநர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது. கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? 

ஆட்சியைப் பிடிக்க எல்லோருக்கும் ஆசைதான். முதலில் குடுமியைப் பிடிக்க வேண்டும். பிறகு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News