உள்ளூர் செய்திகள்
மதிமுக தலைவர் வைகோ

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ம.தி.மு.க.

Published On 2022-02-06 10:59 GMT   |   Update On 2022-02-06 10:59 GMT
தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவை தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளன.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. 

இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.

இந்நிலையில், ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க, பா.ம.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News