உள்ளூர் செய்திகள்
பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
திருப்பத்தூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 11-ந் தேதி காலை 9 மணியளவில் பொது ஏலம் விடப்படுகிறது.
எனவே, வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் சென்று ரூ.100 நுழைவு கட்டணமாக செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும் விற்பனை வரி சேர்த்து செலுத்த வேண்டும்.இதற்கான ரசீது வழங்கப்படும்.
வாகனங்களை ஏலம் எடுத்த வாகனத்துக்குண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாக கருதப்படும்.
இது குறித்து மேலும் விபரமறிய மதுவிலக்கு அமல்பிரிவு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருப்பத்தூர் மாவட்டம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9498116689, 9498150605 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.