உள்ளூர் செய்திகள்
பாண்டி மெரீனா பீச்சில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தம்
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று பாண்டி மெரீனா பீச்சில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்த கென்னடி எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிகுட்பட்ட வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரீனா பீச் அருகில் மீனவர்கள் படகுகள் நிறுத்தும் இடம் இருள் சூழ்ந்து இருந்தது. மேலும் அங்கு விஷபூச்சிகள் தொந்தரவும் இருந்து வந்தது. இதனால் மீனவர்கள் படகுகள் நிறுத்தவும், வளைக்கூடம் அமைத்து தொழில் செய்ய முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
இதுபற்றி அப்பகுதி மீனவர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மீனவளத்துறை இயக்குனரிடம் எடுத்துக்கூறி அப்பகுதியில் மின்விளக்கு மற்றும் ஹைமாஸ் விளக்கு அமைக்க கோரிக்கை வைத்தார். இதனையேற்று அங்கு உடனடியாக மின்விளக்கு மற்றும் ஹைமாஸ் விளக்கு பொருத்தப்பட்டது. அதனை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியின் போது தி.மு.க. ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேலு, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, ஜெயசீலன், ஸ்டாலின், பாலாஜி, லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.