உள்ளூர் செய்திகள்
பெண் தற்கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் வசித்து வருபவர் ராஜீவ்காந்தி (வயது 30). கார் ஓட்டுநரான இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள மல்லியகரை பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதாவுக்கும் (25),
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு குழந்தையில்லாததால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்றனராம்.
ஆனால், எவ்வித பலனும் இல்லையாம். இந்நிலையில், வெளியூர் சின்றிருந்த ராஜீவ்காந்தி, இரவு வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.