உள்ளூர் செய்திகள்
புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அனைவருக்கும் புற்றுநோய் குறியீடு கொண்ட ரிப்பன் அணிவிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் (அலகு -2) சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிச்சிபாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். ஆசிரியர் கனகராஜ் முன்னிலை வகித்தார். அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசினார்.
புகையிலை மற்றும் மது போன்ற பழக்கம் உள்ளவர்களிடம் விழிப்புணர்வு கொடுத்து அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுபட பாடுபடுவேன் என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். அனைவருக்கும் புற்றுநோய் குறியீடு கொண்ட ரிப்பன் அணிவிக்கப்பட்டது.
முடிவில் ஆசிரியர் சம்பத் நன்றி கூறினார்.