உள்ளூர் செய்திகள்
தே மு தி க

சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சியில் போட்டியிடாத தே.மு.தி.க.

Published On 2022-02-06 10:24 IST   |   Update On 2022-02-06 10:24:00 IST
சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்ட்டில் கூட போட்டியிடவில்லை. இதனால் தொண்டர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 142 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்ட்டில் கூட போட்டியிடவில்லை. இதனால் தொண்டர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 157 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் இந்த நகராட்சியிலும் ஒரு வார்டில் கூட தே.மு.தி.க. போட்டியிடவில்லை. கடந்த முறை தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட 2 பேர் வெற்றி பெற்று கவுன்சிலரான நிலையில் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாதது கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்டில் கூட போட்டியிடவில்லை.

Similar News