உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் கொரோனா பாதிப்பை விட குணமடைவது அதிகரிப்பு

Published On 2022-02-06 08:16 IST   |   Update On 2022-02-06 08:16:00 IST
புதுவையில் கொரோனா தொற்று பரவல் 15.26 சதவீதமாகவும், குணமடைவது 95.99 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 344 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 114 பேர், வீடுகளில் 4 ஆயிரத்து 516 பேர் என 4 ஆயிரத்து 630 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,171 பேர் குணமடைந்தனர். அதாவது பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுவை நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்மினி நகரை சேர்ந்த 96 வயது மூதாட்டி பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,947 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தொற்று பரவல் 15.26 சதவீதமாகவும், குணமடைவது 95.99 சதவீதமாகவும் உள்ளது.

நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 326 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 545 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 261 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 41 ஆயிரத்து 422 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News