உள்ளூர் செய்திகள்
வடக்கநந்தல் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

வடக்கநந்தல் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

Published On 2022-02-05 18:49 IST   |   Update On 2022-02-05 18:49:00 IST
வடக்கநந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
கச்சிராயப்பாளையம்:

வடக்கநந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன இதில் 21 வாக்குச்சாவடி மையங்களில் உள்ளன.

இதில் 19827 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஐந்து உள்ளன இதில் அக்கராயபாளையம் அரசு ஆசாத் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார் அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகள் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஊழியர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

வாக்களிக்க வரும் பொதுமக்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் முதியவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைசெய்து தர வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வலியுறுத்தினர் அதை தொடர்ந்து பதற்றமான வாக்குச்சாவடிகளில் 17. 18 .1 2 .3 .9 .என அக்கராயப்பாளையம் வடக்கநந்தல் அம்மாபேட்டை கச்சிராயப்பாளையம் வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார் அப்போது பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் செயல் அலுவலர் ஆறுமுகம் தாசில்தார் ஆனந்தசயன் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆசிரியர்கள் தனசேகர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News