உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு

பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு

Published On 2022-02-05 18:22 IST   |   Update On 2022-02-05 18:22:00 IST
கள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரைகள் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதனை சுற்றியுள்ள கிராம புறத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் படிக்கும் வேங்கைவாடி,சித்தலூர்,பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கள்ளக்குறிச்சி-கொட்டையூர் செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டுகள் மற்றும் பேருந்தின் பின்புறம் ஆபத்தான நிலையில் தொங்கியபடி 10 பள்ளி மாணவர்கள் சென்றனர்.

இது சமூக வலைதளங்களில் வைராக பரவி வருகிறது.இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேருந்து படிக்கட்டு,பின்புறத்தில் தொங்கியபடி சென்ற 10 மாணவர்களை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அறிவுரைகள் வழங கினார்.மேலும் மாணவர்கள் இனிமேல் ஆபத்தான பயணம் செய்யமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பின்னர் என்ன மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பேனா வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

Similar News