உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவர் விவேக்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் மருத்துவர்கள் கார்த்திக்குமார், மணிவண்ணன், கீதா,செவிலியர்கள், ராணிசெல்வகுமாரி, திவ்யா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மருத்துவர் பெரியசாமி கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் நாள் உலகபுற்று நோய் தினம் அனுசரிக்கப் படுகிறது, ஆய்வுகளின் படி தற்போது இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்களே 52.4 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இது புகையிலை மற்றும் புகையிலை பொருட்களால் 49 சதவீதம் உண்டாகிறது. புற்றுநோய் உண்டாவதற்கான காரணங்கள்புகையிலை பொருட்கள்,புகை பிடித்தல், மது அருந்துதல், உடல் உழைப்பு இல்லாமல் அதிக உடல் பருமன்போன்ற வைகளே ஆகும்.
இவற்றை தடுப்பதன் மூலமாகவும், நார்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்வதாலும் புற்றுநோய் வராமல் தடுக்க லாம். மற்றொ ஆய்வின்படி வெள்ளை நிறகாய்கறிகள் முள்ளங்கி, முட்டைகோஸ், காலி பிளவர், உருளை கிழங்கு, முறுங்கைகாய் போன்றவை அதிக அளவில் புற்றுநோய் எதிர்ப்புதன்மை கொண்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் பரிசோதனை முறைகள்தினமும் செய்யப்படுகின்றன. அதற்கான சிகிச்சை முறைகளும் உள்ளன.
ஆகவே ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சைபெறுவதன் மூலம், முழு நிவாரணமும், பாதிப்பில்லா உடல்நலமும் பேணிகாக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் இச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து பெண்களுக்கு மார்பக பரிசோதனை முகாம்நடைபெற்றது. இதில் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.