உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை சாவு
விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.
விருதுநகர்
விருதுநகர் ஆவுடையாபுரத்தை சேர்ந்தவர் நூர்ஜகான் (வயது 40). இவரது மகன் சதாம் உசேன் (23). இவர் மோட்டார் சைக்கிளில் குப்பம்பட்டி கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டார்.
ஆர்.ஆர்.நகரில் இருந்து ஆவுடையாபுரம் செல்லும் சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழேவிழுந்த சதாம்உசேன் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதாம்உசேன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நூர்ஜகான் கொடுத்த புகாரின்பேரில் வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான சதாம்உசேனுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.