உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

Published On 2022-02-05 14:43 IST   |   Update On 2022-02-05 14:43:00 IST
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் வருகிற 7-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, வருவாய் கோட்டாட்சி யர் நிறைமதி சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதில் கலெக்டர் ஜல்லிக்கட்டு காளைகள் முதலில் கொண்டு வரும் பகுதிகள், அங்கிருந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்லும் பகுதி, மாடுபிடி வீரர்கள் உள்ள பகுதி, பொதுமக்கள் பார்வையிடும் கேலரி பகுதி, ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுகளை உரிமையாளர்கள் பிடித்துச்செல்லும் பகுதிளை பார்வையிட்டார்.

ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து  செல்லும் பணிகளை மேற்கொள்ளும் பகுதி, ஜல்லிக்கட்டில் காயமடையும் காளைகளை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள கால்நடை மருத்துவர்கள் உள்ள பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.   

மேலும் அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழங்கினார்.

Similar News