உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வு விவகாரம் - மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்
தலைமை செயலகத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தை அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை புறக்கணித்துள்ளன.
சென்னை:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
அதேசமயம், ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சனிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
இதையும் படியுங்கள்...வசந்த பஞ்சமி - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து