உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- ஓ.பன்னீர்செல்வம் 8 நாட்கள் பிரசாரம்

Published On 2022-02-05 09:25 IST   |   Update On 2022-02-05 09:25:00 IST
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 8 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 8 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் வருகிற 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

வருகிற 7-ந்தேதி (திங்கட் கிழமை) மாலை 5 மணி- காஞ்சிபுரம் நகராட்சி, இரவு 7 மணி - வேலூர் மாநகராட்சி.


8-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணி- ஓசூர் மாநகராட்சி, பிற்பகல் 12.30 மணி- சேலம் மாநகராட்சி, மாலை 4 மணி- ஈரோடு மாநகராட்சி.

9-ந்தேதி (புதன்கிழமை)- காலை 10.30 மணி- கோவை மாநகராட்சி, நண்பகல் 12 மணி- திருப்பூர் மாநகராட்சி, மாலை 4 மணி- திண்டுக்கல் மாநகராட்சி, இரவு 7 மணி- கரூர் மாநகராட்சி.

11-ந்தேதி (வெள்ளிக் கிழமை)- காலை 10 மணி- திருச்சி மாநகராட்சி, நண்பகல் 12 மணி- தஞ்சாவூர் மாநகராட்சி, மாலை 4 மணி- கும்பகோணம் மாநகராட்சி.

12-ந்தேதி (சனிக்கிழமை)- காலை 10 மணி - கடலூர் மாநகராட்சி, மாலை 3 மணி- தென்சென்னை, மாலை 5 மணி- சென்னை புறநகர், இரவு 7 மணி - தாம்பரம் மாநகராட்சி.

13-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை)- காலை 10 மணி- தியாகராயநகர், நண்பகல் 12 மணி- ஆவடி மாநகராட்சி, பிற்பகல் 1.30 மணி- வட சென்னை.

14-ந்தேதி (திங்கட் கிழமை)- நண்பகல் 12 மணி- தூத்துக்குடி மாநகராட்சி, பிற்பகல் 3.30 மணி- நாகர்கோவில் மாநகராட்சி, மாலை 6 மணி- திருநெல்வேலி மாநகராட்சி.

15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை)- காலை 10.30 மணி- சிவகாசி மாநகராட்சி, பிற்பகல் 1 மணி- மதுரை மாநகராட்சி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... நீட் தேர்வு விவகாரம் - அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்க அ.தி.மு.க. முடிவு என தகவல்

Similar News