உள்ளூர் செய்திகள்
திருச்சுழி பகுதியில் நெல் கதிர்களை நாசம் செய்துவரும் காட்டுப்பன்றிகள்
திருச்சுழி அருகே சென்னிலைக்குடி பகுதியில் நெல் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகிறது.
காரியாபட்டி:
திருச்சுழி அருகே சென்னிலைக்குடி பகுதியில் நெல் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகிறது. நெல் அறுவடைக்கு தயார்நிலையில் காட்டுப்பன்றிகள் நெல்வயல்களில் இறங்கி நெல் கதிர்களை சேதம் செய்துவருகிறது. மிகவும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து மகசூல் எடுக்கும் நிலையில் காட்டுப்பன்றிகள் வயல்களில் இறங்கி மிகுந்த நெல் கதிர்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. காரியாபட்டி ,நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது தொடர்ந்து கொண்டே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் சுற்றிவருவதால் விவசாய நிலங்கள் தரிசாக மாறும் நிலை உள்ளது. இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த விவசாயிகளும் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயத்தை கைவிட்டு வெளியூர்களுக்கு பிழைப்பை தேடி செல்லவேண்டிய நிலை ஏற்படும். தொடர்ந்து காட்டுப்பன்றிகளால் விவசாயம் சேதப்படுத்தப்பட்டு வருகிறது என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் விவசாயிகள் முற்றிலும் பாதிகப்படுவார்கள். எனவே காட்டுப்பன்றிகளை ஒழித்து விவசாயிகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.