உள்ளூர் செய்திகள்
பறக்கும் படை வாகன சோதனையில் விவசாயிடம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் விவசாயிடம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் செந்தில் முருகன், விவசாயி இவர் தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலி சத்திரத்திற்கு ஈச்சர் வேனில் சென்று கொண்டிருந்தார் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே வரும் வாகனங்களை பறக்கும் படை அதிகாரி ராமர் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம் மற்றும் போலீசார் சோதனை செய்தனர் அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள செட்டியபட்டி சேர்ந்த விவசாயி செந்தில் முருகன் இடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து பறிமுதல் செய்து நகராட்சித் தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் ஒப்படைத்தனர்.