உள்ளூர் செய்திகள்
நாகை ஆயுதப்படை மைதானத்தில் வாலிபால் போட்டி

நாகை ஆயுதப்படை மைதானத்தில் வாலிபால் போட்டி- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

Published On 2022-02-04 18:06 IST   |   Update On 2022-02-04 18:06:00 IST
நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார்.

போட்டியில் போலீஸ் துறையின் எவரெஸ்ட் அணிக்கும், நாகை பீச் அணிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கூறுகையில்,போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்த வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது என்றார்.

இதில்   போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், விஜய் லூர்துபிரவீன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராஜ் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News