உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Published On 2022-02-04 17:55 IST   |   Update On 2022-02-04 17:55:00 IST
மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா தியாகதுருகம் பேரூராட்சி அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கண்டாச்சிமங்கலம்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த மாதம் 26 ந் தேதி வெளியிட்டார். அதன்படி கடந்த மாதம் 28 ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 

இந்த வார்டுகளுக்கு திமுக மற்றும் அதிமுக வினர் உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் திடீரென மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா பேரூராட்சி அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ் மற்றும் பிரபு ஆகியோர்களிடம் வேட்பு மனு பெறும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் எத்தனை பேர் அனுமதிக்கப்படுகின்றனர், இன்று எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இதுவரை எத்தனை பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, வட்டார தேர்தல் பார்வையாளர் சிவக்கொழுந்து, பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News