உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுபான கூடங்கள் இயங்க நேரம் நீட்டிப்பு

Published On 2022-02-04 16:54 IST   |   Update On 2022-02-04 17:01:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுதல் அதிகரித்து வந்ததை தடுப்பதற்காக அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்க அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News