உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் போலி பீடிகள் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்ட நிறுவனத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து நெல்லையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீடி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி விருதுநகரைச் சேர்ந்த முருகேஷ்(வயது59) என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்த தங்கதுரை (60), சிவகாசியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் போலி பீடிகளை தயாரித்து பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து 41 பீடி பண்டல்கள், 27 கிலோ பீடி இலை, 15 கிலோ பீடி தூள், பிரபல நிறுவனத்தின் போலி லேபிள்கள் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு மூளை யாக செயல்பட்ட தங்கதுரையை போலீசார் கைது செய்தனர். பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.