உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு நெஞ்சு வலி
ராஜபாளையத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஸ்நிலைய பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அந்த பஸ்சின் கண்டக்டரான தென்காசியை சேர்ந்த முத்தையாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
மயக்கம் அடைந்த அவரை உடனடியாக டிரைவர் சுரேந்திரன் பஸ்சை வேகமாக ஓட்டி வந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாற்று கண்டக்டர் வரும் வரை அந்த பஸ், ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேல் அவதிப்பட்டனர்.