உள்ளூர் செய்திகள்
பேரணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

மண்வள பாதுகாப்பு குறித்து பேரணி

Published On 2022-02-04 13:44 IST   |   Update On 2022-02-04 13:44:00 IST
மண்வள பாதுகாப்பு குறித்து பேரணி நடைபெற்றது

புதுக்கோட்டை:

தேசிய நீடித்த நிலைக்கத் தக்க வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை இயக்கம், மண்வள பாதுகாப்பு தொடர்பான விவசாயிகள் பயிற்சி கந்தர்வகோட்டை  புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

பயிற்சியில் புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன் கலந்து கொண்டு மண்வளத்தினை பாதுகாத்திடும் முக்கிய தொழில்நுட்பங்களான பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி, மாற்றுப்பயிர் விவசாயம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

மேலும் விதைநேர்த்தி செய்வதன் அவசியம், இயற்கை உரம் பயன்படுத்துதல், மண்வள அட்டை பரிந்துரையின்படி  உரமிடுதல் தொடர்பாக விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப அலுவலர் கருப்பசாமி, மண்வளம் பாதுகாப்பில் பயிர் சுழற்சி முறையின் அவசியம் குறித்து மாற்று பயிர் சாகுபடிசெய்வ தால் ஏற்படும் நன்மைகள், இயற்கை உரங்கள் பயன் படுத்துவதால்   ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

வேளாண்மை உதவிஇயக் குனர் அன்பரசன் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலமாக தற்போது செயல் பாட்டில் உள்ள திட்டங்கள் மற்றும் அதன் மானிய விவரங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து  கொண்ட மண்வளம் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன் புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பன்னீர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முன்னோடி விவ சாயிகள் கலந்து கொண்டனர். 

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் காளிதாஸ் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் மகேந்திரன், கவியரசன் செய்திருந்தனர்.

Similar News