உள்ளூர் செய்திகள்
வழக்கு

திருக்கோவிலூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு - 2 பேர் மீது வழக்கு

Published On 2022-02-03 17:28 IST   |   Update On 2022-02-03 17:28:00 IST
திருக்கோவிலூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஆதிச்சனூர் துரிஞ்சல் ஆற்றின் கரையோரம் போலீசார் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. 
விசாரணையில் அந்த சாராய ஊறல் திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பாளையத்தை சேர்ந்த, குமார் மற்றும் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News