உள்ளூர் செய்திகள்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் சார்பில் யோகா பயிற்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு யோகா பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
யோகப் பயிற்சி செய்வதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும், உடல் சுறுசுறுப்போடு செயல்படும் என யோகா பயிற்றுநர் பாண்டியன் விளக்கம் அளித்தார்.
இதில் கல்லூரியின் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் ராமபாலன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவராம கிருஷ்ணன், முதலாம் ஆண்டு துறைத்தலைவர் தீபா, முனைவர் தாரணி, உடற்கல்வி இயக்குனர் வேலவன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ& மாணவிகள், பேராசிரியர்கள கலந்து கொண்டனர்.