உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பெரம்பலூர் நகராட்சியில் போட்டியிட ஒரு இடம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க.வினரிடம், 13வது வார்டை ஒதுக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தனர். ஆனால் தி.மு.க.வினர் 13&வது வார்டுக்கு பதில் 21&வது வார்டை ஒதுக்குவதாக காங்கிரசாரிடம் கூறினர்.
இதே போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி தி.மு.க.,- காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாததையடுத்து தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.