உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அரியலூர் மாவட்டத்தில் இது வரை 37 பேர் மனுதாக்கல்

Published On 2022-02-03 13:59 IST   |   Update On 2022-02-03 13:59:00 IST
அரியலூர் மாவட்டத்தில் இது வரை 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டத்தில் 69 பதவியிடங்களுக்கு நடை பெறும் நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தலுக்கு நேற்று வரை 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூர் நகராட்சியில் 18  வார்டுகளுக்கும்,  ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், உடையார் பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும், வரதரா ஜன்பேட்டை பேரூராட்சியில் 15  வார்டுகளுக்கும்  ஆக மொத்தம் 69 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் அரியலூர் நகராட்சியில் 2 நபர்களும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 5 நபர்களும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனுதாக் கல் செய்துள்ளனர்.

மேலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 4 நபர்களும், மற்றும் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் 10 நபர்களும் வார்டு உறுப்பி னர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 நேற்று வரை நகர்ப்புற ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 37 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Similar News