உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஆய்வு செய்த காட்சி

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகள் -கலெக்டர் உத்தரவு

Published On 2022-02-03 13:46 IST   |   Update On 2022-02-03 13:46:00 IST
தேர்தல் சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியலூர்:

நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, வரதராசன்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தென்னூர் புனித மாமரி தொடக்கப் பள்ளி, உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையங்களில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிநீர், மின் விளக்கு, கழிவறை, சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டதுடன், பணிகளை சிறப்பாக மேற்கொள்வதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து,

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அவர், ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார், ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடையார்பாளையம் கோமதி, வரதராசன்பேட்டை ஜெயசெல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News