உள்ளூர் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு சிறை
சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது30). தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2&ம்வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயாரிடம் நடந்த சம்பவத்தை அழுது கொண்டே கூறியது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, ரமேஷை போசோ சட்டத்தில் கைது செய்து, கோர்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.