உள்ளூர் செய்திகள்
விபத்து

சங்கராபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்

Published On 2022-02-02 16:05 IST   |   Update On 2022-02-02 16:05:00 IST
சங்கராபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே கடு வனூர் பகுதியிலிருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று மூங்கில் துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டர் மேல் சிறுவள்ளூர் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேதமானது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.

Similar News