உள்ளூர் செய்திகள்
சேலத்தில் டூவீலர் ஷோரூமில் ரூ 3.75 லட்சம் உதிரிபாகங்கள் திருட்டு
சேலத்தில் டூவீலர் ஷோரூமில் ரூ 3.75 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருட்டுபோனது.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை டி.வி.கே. சாலையில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையத்தில் சர்வீஸ் பிரிவில் மேலாளராக பாபு, உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் மேலாளராக அருள்பிரகாஷ் ஆகியோர் வேலை பார்த்தனர்.
இவர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஷோரூம் நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி உதிரிபாகங்கள் இருப்பு நிலவரத்தை கணக்கீடு செய்தபோது ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள 950 உதிரி பாகங்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது.
இந்த பொருட்களை பாபு மற்றும் அருள்பிரகாஷ் சேர்ந்து கையாடல் செய்ததாக மேலாளர் வினோத்குமார் (வயது 35) சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.