உள்ளூர் செய்திகள்
பலியான மாடு

மோட்டார்சைக்கிள் மோதி மாடு பலி

Published On 2022-02-02 13:39 IST   |   Update On 2022-02-02 13:39:00 IST
மொடக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாடு பலி, 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாடு பலி, 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகிரி அடுத்த மோளப்பாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த ரவி (41). அதேபகுதி கந்தசாமிபாளையம் வடக்கு வீதியை சேர்ந்த சேகர் (50) ஆகிய 2 பேரும் வீடு கட்டும் பணிக்காக மணல் வாங்கும் வேலை விசயமாக மோட்டார்சைக்கிளில்  மொடக்குறிச்சி சென்றனர்.
 
பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மொடக்குறிச்சி அருகே  ஈரோடு-முத்தூர் மெயின்ரோடு அய்யகவுண்டம்பாளையம் நாவிதன் காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று சாலையில் சென்று கொண்டிருந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும்  தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
விபத்தில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News