உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

கந்தர்வக்கோட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-02-02 07:01 GMT   |   Update On 2022-02-02 07:01 GMT
கந்தர்வக்கோட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கியது.
புதுக்கோட்டை:


கந்தர்வகோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து   மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கந்தர்வகோட்டை பகுதிகள் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பறக்கும் படையினர் கந்தர்வகோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது அநத வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.

சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட ரூ. 3லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காரை ஓட்டி வந்த  பிசானத்தூர்கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கைது செய்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை யும், விற்பனை செய்த ஞானசேகரணையும் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News