உள்ளூர் செய்திகள்
மருத்துவ கல்வியில் புதுச்சேரி இடங்களை நிரப்ப ஜிப்மருக்கு அதிகாரம்-எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்
மருத்துவ கல்வியில் புதுவை இடங்களை நிரப்ப ஜிப்மருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை ஒதுக்கீடாக 64 இடங்கள் உள்ளன. இது புதுவை மாணவர்களுக்கு கிடைக்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
புதுவை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சில மாணவர்களின் குடியிருப்பு, சாதி சான்றிதழ் புதுவையை சேர்ந்ததாக இல்லை. சான்றிதழ்களை மீண்டும் சரிபார்த்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
தவறாக விண்ணப்பித்த மாணவர்கள் குறித்து எம்.சி.சி.க்கு தெரிவிக்க வேண்டும் என ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஜிப்மரில் சேர்க்கை அதிகாரம் டெல்லிக்கு மாற்றப்பட்டதால் புதுவையை சேர்ந்தவர்கள் புகார் கூட அளிக்க முடியாத நிலை உருவாகி யுள்ளது. புதுவை இடங்களை நிரப்பும் அதிகாரம் ஜிப்மருக்கே கிடைக்க கவர்னர், முதல்&அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.
1&ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதுவையில் படித்தவர்களுக்கு மட்டுமே ஜிப்மர், அரசு, தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் காமராஜர் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் புதுவை இடங்களை வெளி மாநிலத் தினர் பறிப்பதை தடுக்க முடியும். அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பட்டியலை சென்டாக் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.