உள்ளூர் செய்திகள்
கைது

சிறுமிக்கு தொடர்ந்து தொந்தரவு - தனியார் நிறுவன சூப்பர்வைசர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-02-02 10:32 IST   |   Update On 2022-02-02 10:32:00 IST
ஈரோடு அருகே சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக தனியார் நிறுவன சூப்பர்வைசரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 25). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமி பின்னால் சஞ்சய் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து என்னுடன் பேச வேண்டும் என தொந்தரவு செய்துள்ளார்.

இதேபோல் அந்த சிறுமியின் செல்போனுக்கு அடிக்கடி குறுஞ்செய்தி செய்தும் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு சஞ்சய் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News