உள்ளூர் செய்திகள்
கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாலையூரணிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியின் மனைவி குடும்பத்தை நடத்த தனது நகைகளை அடகு வைக்க முடிவு செய்தார். ஆனால் பீரோவில் இருந்த நகை மாயமாகி இருந்தது.
இதுகுறித்து கேட்டபோது, பாண்டி ஏற்கனவே தனியார் நிதி நிறுவனத்திடம் அடகு வைத்து செலவழித்துவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கணவரை கண்டித்துள்ளார்.
இதனால் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற பாண்டி பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள கிடங்கில் பாண்டி பூச்சிமருந்தை குடித்து பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.