உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் நகராட்சி- 21 அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
வேதாரண்யம் நகராட்சியில் போட்டியிடும் 21 அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி 21 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வேதாரண்யம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் மற்றும் கட்சி பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
1&வது வார்டு முதல் வரிசையாக 21 வார்டு உறுப்பினர்கள் விபரம்:&
ராணி, ஹஜிதா அம்மாள், செந்தமிழ்செல்வி, ராதா, செல்வி, பன்னீர்செல்வம், அம்சலேகா, சத்யா, ஜெகிலா, சீனிவாசன், குமார பாரதி, புனிதா, குமார், வசந்தி, ரமேஷ், பாபுராஜ், சத்யா, நமசிவாயம், இளங்கோவன், கற்பகம், மணிரஞ்சனா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நகர் மன்றத் தலைவர் வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கிரிதரன், வழக்கறிஞர் சுப்பையன், மாவட்ட கவுன்சிலர் திலீபன் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் குமரவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஓய்வுபெற்ற ஆணையர் ராஜரத்தினம் உள்பட ஏராளமான முக்கிய கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.