உள்ளூர் செய்திகள்
வி‌ஷம்

மனைவி திட்டியதால் வி‌ஷம் குடித்து கணவன் தற்கொலை

Published On 2022-02-01 16:21 IST   |   Update On 2022-02-01 16:21:00 IST
சின்னசேலம் அருகே மனைவி திட்டியதால் வி‌ஷம் குடித்து கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கண்டாச்சிமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது30) அவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீதர் லட்சத்தீவில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர் வானவரெட்டியில் உள்ள தனது மனைவி, மகளை பார்க்க கடந்த 28-ந் தேதி சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ஸ்ரீதரை மனைவி ரேவதி திட்டினார்.

மனமுடைந்த ஸ்ரீதர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்தார். பின்னர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். இதனை பார்த்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஸ்ரீதரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News