உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பெண்கள் திடீர் மறியல்

Published On 2022-02-01 14:59 IST   |   Update On 2022-02-01 14:59:00 IST
ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே மாத்தூர் ஒன்றியம் மேல் சின்னபள்ளிகுப்பத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் உள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர்  மாதம் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள் தலைமையில் முகாமுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.தற்போது கட்டிட பணி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் அந்த இடம் முகாம் மக்களுக்கு உதவுவதாக இல்லை என கூறி சின்னபள்ளிகுப்பம், மேல் சான்றோர் குப்பம் முகாமில் உள்ள பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த தகவல் அறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News