உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் தி.மு.க.கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு
பெரம்பலூர் நகராட்சியில் தி.மு.க.கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சியில் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அ.தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது.
பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் உள்ள பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் 21 வார்டு உறுப்பினர் பதவி உள்ளன. இதில் 1, 2, 3, 4, 7, 11, 12, 18 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) 5, 10, 13, 14, 15, 17, 21 ஆகிய வார்டுகள் (பொது), 6, 8, 20 ஆகிய வார்டுகள் எஸ்சி (பொது), 9,16,19 எஸ்சி (பெண்கள்) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவினர் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 வது வார்டும், ம.தி.மு.க. கட்சிக்கு 10 வது வார்டும், காங்கிரஸ் கட்சிக்கு 21 வது வார்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மனித நேய மக்கள் கட்சிக்கும் சீட் ஒதுக்கப்படவில்லை என கூறப் படுகிறது. மீதமுள்ள 17 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படாததால், நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் காண்கின்றனர். மற்ற கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., ஐஜேகே, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தனித்துபோட்டியிடுகிறது.