உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் இது வரை 15 பேர் வேட்பு மனு தாக்கல்
அரியலூர் மாவட்டத்தில் இது வரை 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரியலூர் நகராட்சி 18 வார்டுகளுக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், உடையார்பளையம் மற்றும் வரதராசன் பேட்டை பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கண்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இதுவரை மாவட்டத்தில் 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அரியலூர் நகராட்சியில் இதுவரை எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஜெயங்கொண்டம் நகராட்சியில் 1 ஆவது வார்டில் போட்டியிடு வதற்கு 2 பேரும், 4 மற்றும் 5 ஆவது வார்டுக்கு தலா ஒருவரும், 13 ஆவது வார்டுக்கு 3 பேரும், 20 ஆவது வார்டுக்கு 2 பேரும், 21ஆவது வார்டுக்கு ஒருவரும் ஆக மொத்தம் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
உடையார்பாளையம் பேரூராட்சியில் 6 மற்றும் 14 ஆவது வார்டுகளுக்கு தலா ஒருவரும், வரதராசன் பேட்டை பேரூராட்சியில் 2, 5, 6 ஆகிய வார்டுகளுக்கு தலா ஒருவரும் என மொத்தம் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.